Home கலை உலகம் ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்!

ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்!

813
0
SHARE
Ad

17-1439804034-vishal-met-kamalசென்னை, ஆகஸ்ட் 17- விஷால் அணியினர் நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு ரஜினிகாந்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

நாசர் தலைமையில்  விஷால்,கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் குஷ்பு ஆகியோர் சென்று கமலைச் சந்தித்தனர்.

சிறிது நேரம் கமலுடன் உரையாடினர்.அவர்கள் பேசிக் கொண்டதன் விவரம் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

கமலின் ஆதரவு யாருக்கு என்பது பின்னர் தெரிய வரும்.

செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் என்பது உறுதியாகியுள்ள நிலையில், சரத்குமார் அணியினரும் விஷால் அணியினரும் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.