Home Featured நாடு பிரதமரைக் கீழிறக்க மொகிதினை சந்திக்க வில்லை – லிம் குவான் எங்

பிரதமரைக் கீழிறக்க மொகிதினை சந்திக்க வில்லை – லிம் குவான் எங்

609
0
SHARE
Ad

articles27062013_Lim_Guan_Eng2_600_454_100ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட் 10 – பிரதமர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நஜிப்பை கீழிறக்கும் நோக்கத்துடன் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை தாம் சந்தித்துப் பேசவில்லை என லிம் குவான் எங் கூறியுள்ளார்.

தனிப்பட்ட வகையில் மொய்தின் யாசினை தாம் எப்போதுமே சந்தித்துப் பேசியதில்லை என்றும், அவ்வாறு வெளிவரும் செய்திகள் அனைத்துமே வெறும் வதந்தி என்றும் லிம் குவான் எங் தெளிவுபடுத்தி உள்ளார்.

“1எம்டிபி விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே சிலர் இவ்வாறு செயல்படுகிறார்கள். என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இவையெல்லாம் வெறும் பொய்கள். நான் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது,” என்றார் லிம் குவான் எங்.

#TamilSchoolmychoice

முன்னதாக இணைய வலைப்பக்கம் ஒன்றில், பிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்றும் நோக்கத்துடன் குவான் எங்கும், மொய்தின் யாசினும் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.