Home இந்தியா சென்னையில் நாளை முதல் நெகிழிப் பைகள் பயன்படுத்தத் தடை!

சென்னையில் நாளை முதல் நெகிழிப் பைகள் பயன்படுத்தத் தடை!

530
0
SHARE
Ad

UK-plastic-bag-ban-001சென்னை,ஆகஸ்ட் 14- சென்னையில் நாளை முதல் நெகிழிப்(பிளாஸ்டிக்) பைகளைப் பயன்படுத்த சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னை மாநகரமெங்கும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன.

அதை அப்புறப்படுத்துவதிலும் மாநகராட்சி ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

#TamilSchoolmychoice

சென்னையிலிருந்து அள்ளப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு போய் நகருக்கு வெளியில் கொட்டுவதிலும் பிரச்சினையிருக்கிறது.

சுற்றுப்புறத்திலுள்ளவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்.

பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்கும் போது கிளம்பும் புகையும்  உடலுக்குத் தீங்கானது என்பதால் மாநகராட்சி இவ்விசயத்தில் தீவிரமாக இருக்கிறது.

எனவே,மக்கும் தன்மையற்ற 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த நாளை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், மீறிப் பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் துணிப்பைகள் அல்லது காகிதப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.