Home உலகம் சீன வெடி விபத்துப் பகுதியில் இன்னும் தீ எரிகிறது; துர்நாற்றம் வீசுகிறது!

சீன வெடி விபத்துப் பகுதியில் இன்னும் தீ எரிகிறது; துர்நாற்றம் வீசுகிறது!

546
0
SHARE
Ad

tiiதியான்ஜின், ஆகஸ்ட் 14- சீனாவின் தியான்ஜின் நகரில் அபாயகரமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் நடந்த பெரிய வெடி விபத்தில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர்.

வெடி விபத்து நடந்து 40 மணிநேரம் கடந்துவிட்ட பின்னரும், அங்கு இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், கண்கள் எரிவதாகவும் தியான்ஜின் நகர மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

வெடிவிபத்து நடந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களின் முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் ,இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி  ஆராய்ந்து வருவதாகவும் சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.