Home Featured உலகம் 100 மீட்டர் இந்தியக் கொடியைத் தாங்கி இந்தியாவிற்கு நன்றி செலுத்திய ஆப்கன் இளைஞர்கள்!

100 மீட்டர் இந்தியக் கொடியைத் தாங்கி இந்தியாவிற்கு நன்றி செலுத்திய ஆப்கன் இளைஞர்கள்!

844
0
SHARE
Ad

india-afghanகாபூல், ஆகஸ்ட் 15 – ஆப்கானிஸ்தானின் மேற்குப்பகுதியான ஹீரட் மாகாண மக்கள் தண்ணீர் பிரச்சனையால் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். ஆப்கனுடன் எப்போதும் நட்பு பாராட்டி வரும் இந்தியா, இந்த விவகாரம் தொடர்பாக அறிந்ததும் உடனடியாக தலையிட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அப்படி மேற்கொண்ட ஒரு முயற்சி தான் சல்மா அணையை மறுசீரமைக்கும் பணி.

சுமார் 300 மில்லியன் டாலர்கள் செலவில், கடந்த 2006-ம் ஆண்டு பணியைத் தொடங்கிய இந்தியா, மிகப் பெரிய அந்த அணையை முழுவதுமாக மறுசீரமைத்தது. இந்த அணையின் மூலம் சுமார் 42 மெகா வாட் மின்சாரமும், கிட்டத்தட்ட 80,000 ஹெக்டேர் விவசாய நிலத்திற்கான தண்ணீரும் கிடைக்க ஏற்பாடு செய்தது.

india-afghan2இந்தியாவின் இந்த உதவியால், பெரும் துயர் நீக்கப்பட்டதை உணர்ந்துள்ள ஹீரட் மாகாண இளைஞர்கள், இந்திய சுந்தந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சுமார் 100 மீட்டர் நீளம் கொண்ட இந்தியக் கொடியை, ஹீரட் பகுதியில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் முன்பு தாங்கிப் பிடித்து தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ஆப்கன் இளைஞர்களின் இந்த செயல் இந்தியாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது. இதன் மூலம், இந்தியா-ஆப்கன் உறவு மேலும் வலுபெறும் என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.