Home இந்தியா சானியா மிர்சாவிற்கு ‘கேல் ரத்னா’ விருது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சானியா மிர்சாவிற்கு ‘கேல் ரத்னா’ விருது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

705
0
SHARE
Ad

Saniaபுது டெல்லி, ஆகஸ்ட் 15 – இந்திய டென்னிஸ் விளையாட்டின் பெருமை மிகு வீராங்கனையான சானியா மிர்சா, இந்திய விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அதனை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கிரிக்கெட் மட்டுமே உலகமாக இருந்த இந்தியாவில், டென்னிஸ் விளையாட்டில் பெரிய அளவில் சாதித்து வந்த சானியா மிர்சா, சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிஸில் மகளிருக்கான இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது அவருக்கு மணி மகுடமாக அமைந்தது.

அவரின் இந்த சாதனையை கௌரவிக்கும் விதமாகத்தான் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சானியா மிர்சா கூறுகையில், “கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகி இருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். நாட்டு மக்கள் என் மீது வைத்துள்ள அன்பையும், மரியாதையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் 29–ந்தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.