Home இந்தியா பாலியல் குற்றவாளிகளின் விவரங்களை வெளியிட புதிய வலைதளம்!

பாலியல் குற்றவாளிகளின் விவரங்களை வெளியிட புதிய வலைதளம்!

536
0
SHARE
Ad

IndiaTv3914ee_GangRapeபுதுடில்லி, ஆகஸ்ட் 15- பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடும் வகையில், புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவின்  69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு `நாட்டைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அண்மைக் காலங்களில் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் மீது பாலியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.அதுவும் குறிப்பாக 15 வயதிற்கு உட்பட்ட சிறுமியரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் கொடூரமான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

இது சிறுமியருக்கும் பெண்களுக்குமான பாதுகாப்பிற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.எனவே,பெண்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பெண்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவக் கூடிய ‘ஹிம்மத்’ செயல்முறையை டில்லி காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். ஹிம்மத்’ என்ற செயலியைத் தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு ஒரு பெண், ஆபத்தான சூழ்நிலையில் இருக் கும்போது அதனைப் பயன்படுத்தினால் உடனே அந்த இடத்துக்கு 5 அல்லது 7 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் உதவிக்கு வருவர்.

மேலும், இந்த நடைமுறையின் அடுத்தகட்டமாகப் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களை யும் இணையத்தில் பதிவு செய்யும் வகையில், புதிய வலைதளம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தப் புதிய வலைதளத்திற்குக் ‘குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறியும்  வலைதளம்’ (crime and criminals tracking network systems project) எனப் பெயரிட எண்ணியுள்ளனர்.

இந்த வலைதளத்தில் இந்தியா முழுவதுமுள்ள பாலியல் குற்றவாளிகளின் விவரங் கள் வெளியிடப்படும். அதனை வைத்து பெண்களின் பெற்றோர், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் போன்றவர்கள், ஒரு நபரின் நடத்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

தவிர, இந்த வலைதளத்தில் தீவிரமாகத் தேடப்படும் குற்றவாளிகள், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் பற்றியும் தகவல்கள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.