Home நாடு மலேசியாவில் நிதி திரட்டிய விடுதலைப்புலி கைது!

மலேசியாவில் நிதி திரட்டிய விடுதலைப்புலி கைது!

622
0
SHARE
Ad

15-1439622432-ltte-arrest-600கோலாலம்பூர், ஆகஸ்ட் 15- விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பித்துப் புத்துயிர் பெறச் செய்வதற்காக மலேசியாவில் நிதி திரட்டிய விடுதலைப்புலி ஒருவரை மலேசியக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.அவரிடம் விசாரணை மேற்கொண்ட பின் உடனடியாக அவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த  யுத்தத்தில் விடுதலைப்புலிகள் பலர் கொல்லப்பட்டதுடன், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் வீரமரணம் அடைந்து விட்டதால், அதன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கம் செயலற்றுப் போய்விட்டது.விடுதலைப்புலிகளில் பலர் பல்வேறு தேசங்களுக்குச் சிதறிப் போய்விட்டனர்.

ஆனால்,வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் இரகசியமாகச் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு அடிக்கடி குற்றம்சாட்டி வந்தது.

#TamilSchoolmychoice

ஒரு மாதத்திற்கு முன்பு,ராமேஸ்வரத்தில் வாகன சோதனையின் போது சயனைடு குப்பிகள் மற்றும் ஆயுதங்களுடன் விடுதலைப்புலிகள் மூவர் சிக்கினர்.அவர்களிடம் விசாரணை செய்ததில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதேபோல் இன்று கொல்கத்தாவின் சாந்தினி சவுக் பகுதியில் அம்மாநிலச் சிறப்பு அதிரடிப்படையினர் 6 விடுதலைப்புலிகளைக்  கைது செய்துள்ளனர். அவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர்.

அவர்கள் 6 பேரும் கொல்கத்தாவுக்கு ஏன் வந்தார்கள்? இவர்களுக்குத் மாவோயிஸ்டு அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? ஆயுதக் கடத்தலில் ஈடுபட வந்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் 2012-ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வந்துள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நிதியை மலேசியாவில் திரட்டும் நோக்கில் வந்து தங்கியுள்ளதாகவும் தெரிய வந்தது.எனவே, உடனே அவரை மலேசிய அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

இச்செய்திகள் மூலம், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் உலகளவில் இரகசியமாக நடைபெற்று வருவது தெரிகிறது.