செப்டம்பர் 18-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் தலைப்பைத் தீர்மானிப்பதில் இயக்குநர் குழு தீவிரமாக உள்ளது.
முள்ளும் மலரும் படத்தில் வரும் காளி கதாபாத்திரத்தைப் போல, ரஜினி இந்தப் படத்திலும் தோன்றுவார் என்பதால், ‘காளி’ என்று பெயர் வைக்கலாம் என இயக்குநர் சொன்னார்.
ஆனால், ஏற்கனவே காளி என்ற படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். காளி என்ற பெயர் அறச் சொல்லாக இருப்பதால், காளி படத்தில் பல சிக்கலைச் சந்தித்ததாகவும்,அதனால் நன்றாக யோசித்து முடிவெடுக்கும் படியாக ரஜினி கூறிவிட்டார்.
அதனால், காளி தலைப்பை விட்டுவிட்டு தற்போது ‘கண்ணபிரான்’ என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தகவல்கள் பரவுகின்றன.
ஆனால், கண்ணபிரான் என்னும் தலைப்பை இயக்குநர் அமீர் ஏற்கனவே பிலிம் சேம்பரில் பதிவு செய்து வைத்துள்ளார்.எனவே, அவரிடம் அனுமதி பெற முயற்சி நடக்கிறது.
எப்படியோ கூடிய விரைவில் தலைப்பு தீர்மானமாகி, அறிவிப்பு வெளியிடப்படும்.