Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ சார்பில் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

அஸ்ட்ரோ சார்பில் ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, சனிக்கிழமை, நடைபெற்ற அஸ்ட்ரோ இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015 பாடல் திறன் போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ச்சியில், கலைத்துறையில் நீண்ட காலம் சேவையாற்றி வரும் ஐந்து மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழகத்தின் மூத்த பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், மலேசிய நாடகத்துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞரும், மறைந்த கவிஞர் ரெ.சண்முகத்தின் துணைவியாருமான சந்திரா சண்முகம், தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.பழனிசாமி, மலேசிய கலைத்துறையில் அனுபவம் வாய்ந்த பெண் இயக்குநர் தேவராணி ஆகிய ஐவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, அஸ்ட்ரோ இந்தியப் பிரிவின் பொறுப்பாளர் முருகையா வெள்ளை, ‘மலிண்டோ ஏர்’ நிறுவனத்தின் முதன்மை செயல்முறை அதிகாரி சந்திரன் இராமமூர்த்தி ஆகியோர் இந்த ஐவருக்கும் விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினர்.

#TamilSchoolmychoice

அதன் படத்தொகுப்பை இங்கே காணலாம்:

jCPvu-NhiqG4TAyY4AWxBgfG0A3N7IxWnsyUjGnqpy8

7yDFTxQQuZC74NtRQfI3rqV88B0WXwjODrpbz5Mh3l0

hXtctlFEcCKx0tQ-npMxJo0UOMk2A_1VYYoFA3b2chQ

7238p-wAGLKIavnFCjNmNuzz7Tx7loBMWkO0s2qBX8Q

_sRonvy5crznF-X7XY0jRiRI-kgumSofdNvbvHmntuA