சென்னை, ஆகஸ்ட் 18- தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மோடி- ஜெயலலிதா சந்திப்பை விமர்சித்துப் பேசியதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப் பொம்மையை எரித்து அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுக-வினர் அதனுடைய வாசலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை எரித்து, ஆவேசமாக முழக்கமிட்டனர். பெண்கள் சிலர் அவரது உருவப்படத்தைச் செருப்பாலும் துடைப்பத்தாலும் அடித்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.நிலைமை கட்டுக்கடங்காமல் போக, உடனடியாகக் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
சத்திய மூர்த்தி பவனுக்குள் கோபாவேசமாக நுழைய முயன்ற சிலரைக் காவல்துறையினர் தடுத்து அப்புறப்படுத்தினர்.
இத்தகைய அத்துமீறலான- அநாகரீகமான போராட்டத்திற்குக் குஷ்பு முதலான காங்கிரஸ் பிரமுகர்கள், ‘இது ஜனநாயகத்திற்கு எதிரானது’ கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்ட்ம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய ஆளுங்கட்சியினரே இப்படி வெறியாட்டம் போடலாமா? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.