Home கலை உலகம் ரஜினி படத் தலைப்பு கபாலிக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் சிவகுமார்!

ரஜினி படத் தலைப்பு கபாலிக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் சிவகுமார்!

530
0
SHARE
Ad

rajini43-600சென்னை, ஆகஸ்ட் 18- ரஜினியின் புதுப் படத்திற்குத் தலைப்பு ‘கபாலி’ என்று நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் ஜெட் வேகத்தில் அச்செய்தியைப் பகிரத் தொடங்கிவிட்டார்கள்

இந்நிலையில், மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், ‘கபாலி’ என்னும் படத் தலைப்பு எனக்குரியது என்றுபோர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘சிவா பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் கபாலி என்ற படத்தைக் கடந்த மூன்று வருடங்களாக எடுத்து வருகிறாராம்.2012-ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி, வீ.சேகர் ஆகியோரைக் கொண்டு படப் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் காட்டியுள்ளார். பணப் பிரச்சினையால் படம் முடங்கிக் கிடப்பதாகச் சொல்கிறார்.

17-1439818090-kabali3531-600 (1)

(கோப்புப் படம்: இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வீ.சேகர் ஆகியோர் முன்னிலையில் பாடல் வெளியீடு)

ஆனால், தற்போது அந்தப் படத் தலைப்பை ரஜினி படத்திற்கு வைக்க கில்டு அமைப்பு ஒப்புதல் அளித்து விட்டதாகப் பிரச்சினை கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து சிவகுமார், “ரஜினி படத்துக்குக் கபாலி எனப் பெயர் வைத்ததும் அதிர்ந்துவிட்டேன். கில்டில் பணம் கட்டிக் கபாலி என்ற பெயரைப் பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பெயர் எனக்கே சொந்தம். இப்போது கேட்டால், பெயரைப் புதுப்பிக்கவில்லை; அதனால் அது காலாவதியாகிவிட்டது என்று புதுக்கதை சொல்கிறார்கள்.

படத்தலைப்பை வெறுமனே பதிவு செய்துவிட்டுப் படம் எடுக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. அந்தப் பெயரில் 90 சதவீதம் படமும் எடுத்துவிட்டேன். இப்போது வந்து இப்படிச் சொன்னால் எப்படி?

பல லட்சம் செலவு செய்து படம் எடுக்கிற நான், ஐநூறு ரூபாய் கட்டிப் பெயரைப் புதுப்பிக்க மாட்டேனா? இதெல்லாம் சதிங்க!” என்று சொல்லிப் புலம்புகிறார் சிவகுமார்.

அவரைச் சமாதானம் செய்ய முயற்சி நடக்கிறது.

ரஜினிக்கு மூன்று எழுத்தில் உள்ள இந்தத் தலைப்பு மிகவும் பிடித்திருக்கிறதாம்!