ஜகார்த்தா, ஆகஸ்ட் 18 – 54 பேருடன் விபத்திற்குள்ளான இந்தோனேசிய விமானமான டிரிகானா ஏரின் கறுப்புப் பெட்டியைய மீட்புக் குழுவினர் இன்று கண்டெடுத்துள்ளனர்.
“உள்ளூர் நேரப்படி 1.40 மணியளவில் டிரிகானா ஏரின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது” என்று அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த விமானத்தில் 54 சடலங்களையும் மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், 54 பயணிகளுடன் ஜெயபுரா விமான நிலையத்தில் இருந்து ஆக்சிபில் நோக்கிப் புறப்பட்ட திரிகானா ஏடிஆர் 42-300 என்ற அந்த விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியது.
இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அவ்விமானம் மலையில் மோதி, ஆக்சிபில்லில் இருந்து 7 மைல் கடற்பரப்பளவில் இருந்த பிந்தாங்க் மலைத்தொடரில் அமைந்திருக்கும் மலையிடுக்குகளில் விழுந்து நொறுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.