Home Featured உலகம் டிரிகானா விமானத்தில் 6.5 பில்லியன் ரூபியா பணம் இருந்ததாகத் தகவல்!

டிரிகானா விமானத்தில் 6.5 பில்லியன் ரூபியா பணம் இருந்ததாகத் தகவல்!

636
0
SHARE
Ad

C_4_articolo_2128329_upiImageppஜெயபுரா, ஆகஸ்ட் 17 –  விபத்திற்குள்ளானதாக நம்பப்படும் இந்தோனேசிய விமானம் டிரிகானா ஏரில், கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக 6.5 பில்லியன் ரூபியா ( 1,883,424 மலேசிய ரிங்கிட்) பணம் இருந்ததாக அந்நாட்டு தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெயபுரா தபால் அலுவலகத்தின் தலைவர் ஹர்யோனோ கூறுகையில், அந்தப் பணத்தை 4 பாதுகாவலர்கள் கொண்டு சென்றதாகவும், அந்தப் பணம் நான்கு பைகளில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மலைப் பகுதிகளில் தற்போது மீட்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், 54 பயணிகளுடன் ஜெயபுரா விமான நிலையத்தில் இருந்து ஆக்சிபில் நோக்கிப் புறப்பட்ட திரிகானா ஏடிஆர் 42-300 என்ற அந்த விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.