Home இந்தியா மேகி நூடுல்ஸ் மீதான ரூ 640 கோடி இழப்பீடு வழக்கைக் கைவிட மாட்டோம்: மத்திய அரசு

மேகி நூடுல்ஸ் மீதான ரூ 640 கோடி இழப்பீடு வழக்கைக் கைவிட மாட்டோம்: மத்திய அரசு

727
0
SHARE
Ad

nestle maggiபுதுடில்லி, ஆகஸ்ட் 17- ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மேகி நூடுல்ஸ் நெஸ்லே நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக் காரீயம் கலந்திருப்பதாகப் புகார் எழுந்து, அது ஆய்வகச் சோதனையிலும் உறுதியானதைத் தொடர்ந்து, மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பு கடந்த ஜூன் 5-ம் தேதி, 9 வகையான மேகி நூடுல்ஸ்க்கும் தடை விதித்தது.

இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி மேகி நூடுஸ் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், விதிமுறைகளை மீறி மேகி நிறுவனம் செயல்படுவதாகவும், தவறான விளம்பரங்கள் மூலம் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.640 கோடி இழப்பீடு கோரித் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் மேகி நூடுஸ் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டிருப்பதாலும், அமெரிக்க உணவுப் பாதுகாப்பு ஆணையம் கூட மேகி நூடுஸ் பாதுகாப்பான உணவு தான் எனக் கருத்துத் தெரிவித்திருப்பதாலும், மேகி நூடுல்ஸ் மீதான இழப்பீட்டு வழக்கை மத்திய அரசு கைவிட்டுவிடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால், ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மேகி நூடுல்ஸ் நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், “உயர் நீதிமன்ற உத்தரவால் இழப்பீடு கோரி தொடரப்பட்டுள்ள வழக்கைக் கைவிடும் திட்டமில்லை.

அதுமட்டுமல்லாமல், மேகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பாகச் சில ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம்.அந்த ஆதாரங்கள் வலுவாகக் கிடைக்கும் நிலையில், இன்னும் கூடுதலாக இழப்பீடு கோருவோம்” என்று கூறியுள்ளார்.