கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 – பெர்சே 4.0 ஒருங்கிணைப்பாளர்களுடன் எந்த ஒரு சந்திப்பையும் தாம் மேற்கொள்ள விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30-ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெர்சே 4.0 கூட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அதன் ஏற்பாட்டாளர்கள், டாங் வாங்கி ஓசிபிடியை தான் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் பெர்சே 4.0 ஏற்பாட்டாளர்கள் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள காலிட், அப்படி மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பெர்சே பேரணியை புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடத்தும் படியும் கூறியுள்ளார்.
டத்தாரான் மெர்டேக்காவும், பாடாங் மெர்போக்கும் கோலாலம்பூரின் மிக முக்கியமான பகுதிகள் அது பேரணி நடத்தக்கூடிய இடம் அல்ல என்றும், இந்த இரண்டு பகுதிகளிலும் மெர்டேக்கா தினக் கொண்டாட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.