Home இந்தியா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், புதிய தலைமுறை மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

568
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஆகஸ்ட்18- பிரதமர் மோடி சென்னை வந்திருந்த போது, போயஸ் தோட்டத்திற்குச் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசி, மதியம் அங்கேயே உணவு உண்டு விட்டுச் சென்றார்.

கடந்த 14-ஆம் தேதி மது விலக்குக் கோரி காங்கிரஸ் சார்பில் நடந்த  உண்ணாவிரதத்தில் பேசிய தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன், மோடி-ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சைப்படுத்திப் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்துத் தரக்குறைவாகப் பேசியதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதும் அவரது பேச்சை ஒலிபரப்பிய புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதும்  ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு மனுவைத் தாக்கல் செய்தார்.