Home கலை உலகம் பாங்காக் குண்டுவெடிப்பில் நூலிழையில் தப்பிய நடிகை ஜெனிலியா!

பாங்காக் குண்டுவெடிப்பில் நூலிழையில் தப்பிய நடிகை ஜெனிலியா!

947
0
SHARE
Ad

jeniliya_0சென்னை, ஆகஸ்ட் 18- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த அதிபயங்கரமான குண்டுவெடிப்பில் நூலிழையில் தப்பி வந்திருக்கிறார் நடிகை ஜெனிலியா.

இந்தி நடிகர் . ரித்தீஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயான பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த நடிகை ஜெனிலியா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கச் சம்மதித்தார்.

அந்தப் படப்பிடிப்பிற்காகத் தாய்லாந்து சென்ற ஜெனிலியா தனது கணவர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் பாங்காக் நகரில் வெடிகுண்டு வெடித்த வணிக வளாகக் கட்டிடத்தின் எதிரேதான் தங்கியிருந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

குண்டுவெடித்த சத்தமும், அங்கே எழும்பிய மரண ஓலமும், அதைத் தொடர்ந்து அவசர ஊர்திகளின் சைரன் சத்தமும்  தங்களுக்கு நன்றாகக் கேட்டதாகவும், பயந்து போய் வெளியில் வரவில்லை என்று ஜெனிலியா தனது நட்பு ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,அந்தக் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்குத் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியவர்களுக்குத் தன்னுடைய கண்டனத்தையும் அதில் தெரிவித்துள்ளார்.