Home உலகம் சீன வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

சீன வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

577
0
SHARE
Ad

85013454_85013453தியான்ஜின் ,ஆகஸ்ட் 18- சென்ற வாரம் புதன் கிழமையன்று சீனாவில் தியான்ஜின் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 114 பேர் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு இன்று சீனாவின் பல பகுதிகளில் சீன நாட்டு முறைப்படி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விபத்து நடந்த இடத்திலும், பாதுகாப்பாக மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் தற்காலிகக் குடில்கள் போன்றவற்றிலும் சீன மரபுப்படி மெழுகுவர்த்திகளை ஏற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி,மலர்களைத் தூவி உயிரிழந்தவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.