Home இந்தியா கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்- ஸ்குவா‌ஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் திருமணம்

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்- ஸ்குவா‌ஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் திருமணம்

610
0
SHARE
Ad

dk11சென்னை, ஆகஸ்ட் 19- தமிழகக் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் – இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் இருவருக்கும் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தினேஷ் கார்த்திக்கும் தீபிகா பல்லிகலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலில் விழுந்தார்கள். அவர்கள் காதலிக்கும் செய்தி பரவத் தொடங்கிய உடனே 2013 நவம்பரில் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இருவரும் அவரவர் லட்சியத்தில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால், இரண்டு ஆண்டுகள் கழித்து 2015ல் தான் திருமணம் என்று அப்போதே முடிவெடுத்தார்கள்.

#TamilSchoolmychoice

அதன்படி,நேற்று இருவருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தாலும், நாளை மீண்டும் இந்து தெலுங்கு நாயுடு முறைப்படியும் திருமணம் நடக்கவுள்ளது.