Home இந்தியா பிரணாப் முகர்ஜி மனைவி இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது: மோடி நேரில் அஞ்சலி

பிரணாப் முகர்ஜி மனைவி இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது: மோடி நேரில் அஞ்சலி

570
0
SHARE
Ad

19-1439957088-modi-paying-his-last-respecபுதுடில்லி, ஆகஸ்ட் 19- குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது.

அவரது நல்லுடல் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் இறுதி அஞ்சலிக்காகக் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை 5 மணி வரை வைக்கப்பட்டிருந்தது.

அவரது  நல்லுடலுக்குப் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மேலும், மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு தல்கதோராவில் உள்ள பிரணாப்முகர்ஜியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான  அபிஜித் முகர்ஜி வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வருகை தருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.