Home இந்தியா முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை!

601
0
SHARE
Ad

raசென்னை, ஆகஸ்ட் 19- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா வீட்டில் இன்று சிபிஐ அதிரடியாகச் சோதனை நடத்தியது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆ.ராசா  தகவல் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது  2ஜி அலைக்கற்றை  முறைகேடு நடத்தியதாக சி.பி.ஐ. இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் ஆ.ராசா மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.27.கோடி சொத்து சேர்த்துள்ளதாக சி.பி.ஐ புதிய வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்,  சென்னை மற்றும்  டெல்லியிலுள்ள ஆ.ராசா வீட்டில் சிபிஐ அதிரடியாகச் சோதனை நடத்தியது.

மேலும், தமிழகத்திலுள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆ.ராசாவின் வீடு, அவரது உறவினர்கள் வீடு மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடு என மொத்தமாக 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள ஆர்.ராசாவின் நண்பர் சாதிக் பாஷா வீ ட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிக நேரம் சோதனை நடத்தினர்.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா, விசாரணை நடந்து கொண்டிருந்த போதே  தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், திடீரென சிபிஐ சோதனை நடத்தியிருப்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சாதிக் பாட்ஷா வீட்டில் அதிக நேரம் சோதனை நடந்ததால், 2ஜி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? அல்லது சாதிக் பாஷாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என்பதைத் தெரிவிக்க சி.பி ஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.