Home இந்தியா கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று திமுகவில் அதிகாரப்பூர்வமாய் இணைந்தார்!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்று திமுகவில் அதிகாரப்பூர்வமாய் இணைந்தார்!

973
0
SHARE
Ad

MANUSHYAPUTHRANசென்னை, ஆகஸ்ட் 19-  இதுவரை திமுக-வின் ஆதரவாளராக இருந்து வந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.

மனுஷ்யபுத்திரன் என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் இவரது இயற்பெயர் எஸ். அப்துல் ஹமீது . திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர், கடந்த 20 ஆண்டுகளாகப் பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி எனப் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருகிறார்.

சென்னையில் உயிர்மைப் பதிப்பகம், உயிர்மை இதழ் ஆகியவற்றை  நடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

இலக்கியச் சிற்பி எனப் போற்றப்பட்டும்,  சிறந்த சிந்தனைவாதியாக அறியப்பட்டுவரும் இவர் நல்ல பேச்சாளரும் கூட.

இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் விருதைப் பெற்றவர் இவர். என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்தது  தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

“திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து கலைஞர் விருதிற்குத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன்.

அப்போது,திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதிகாரபூர்வமாக இணையும் படிவத்தில் கையெழுத்திட்டேன். திராவிட இயக்க லட்சியங்களையும் சமூக நீதிக் கோட்பாடுகளையும் முன்னெடுக்கும் எனது பயணத்தில் இந்த நாளை எனது வாழ்வில் முக்கியமானதாகக் கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.