Home Featured நாடு “என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து

“என்னைத் துன்புறுத்துங்கள்; எனது குடும்பத்தைத் துன்புறுத்த வேண்டாம்” – சாஹிட்டுக்கு அன்வார் வலியுறுத்து

569
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – சிறையில் தனக்கு விதிக்கப்படும் அதிகமான கட்டுப்பாடுகள் குறித்தும், தனது குடும்பத்தினர், வழக்கறிஞர் என யாரையும் தன்னை சந்திக்க அனுமதிக்காத சிறை நிர்வாகம் குறித்தும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று ஊடகங்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டின் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அகமட் சாஹிட் ஹமீடி தனது குடும்பத்தினருக்கு மிகவும் துன்பம் கொடுப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“அன்வாரைத் துன்புறுத்துங்கள். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் என் குடும்பத்தை துன்புறுத்தாதீர்கள். என்னை சந்திப்பது கூட அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. என்னை சந்திக்க விடுங்கள்.இதை சாஹிட் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “எனது வழக்கறிஞர்கள் சில வழக்குகள் தொடர்பாக என்னை வந்து சந்திப்பதை அவர்கள் ஏற்கனவே தடுத்துவிட்டனர். இப்போது எனது மகனைக் கூட பார்க்கவிடாமல் செய்கின்றனர்” என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அன்வாரின் மகன் நியூயார்க் செல்வதாகவும், தன்னை சிறையில் சந்திக்க வந்த அவரை அதிகாரிகள் தடுத்துவிட்டதாகவும் அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறை நிர்வாகம் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.