Home உலகம் வந்துவிட்டது பெண்களுக்கான வயாகரா! அக்டோபர் முதல் சந்தையில்!

வந்துவிட்டது பெண்களுக்கான வயாகரா! அக்டோபர் முதல் சந்தையில்!

3518
0
SHARE
Ad

vaவாஷிங்டன், ஆகஸ்ட் 20- பெண்களின் பாலின இச்சையைத்  தூண்டும் வயாகரா மாத்திரைக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைக்கு ஒப்புதல் அளித்திருப்பது இதுவே முதன்முறையாகும்.

ஏற்கனவே ஆண்களின் பாலுணர்ச்சியைத்  தூண்டும்  வயாகரா மாத்திரைகள் சந்தைக்கு வந்து விட்டன. அதுவே பெரும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆண்கள் பயன்படுத்தும் வயாக்ராவினால் பல பக்க விளைவுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில், பெண்களுக்குப் பாலியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வயாக்ரா மாத்திரையைப் பிளிபான்செரின் என்ற பெயரில் அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

ஆண்களுக்குப் பெண்கள் சரிசமம் என்பதால் இந்த மாத்திரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்குரல் எழுப்பியதால், அமெரிக்க உண்வு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாத்திரையால் பெண்களுக்குக் குறைந்த ரத்த அழுத்தம், மயக்கம், வாந்தி, தூக்கமின்மை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், சிலர் இந்த மாத்திரை பெண்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று வரவேற்றுள்ளனர்.

இந்த மாத்திரை வரும் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் மருந்து கடைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.