Home இந்தியா வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பொருட்கள் கொண்டு வர புது விதிமுறைகள்!

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பொருட்கள் கொண்டு வர புது விதிமுறைகள்!

594
0
SHARE
Ad

airportபுதுடில்லி, ஆகஸ்ட் 20- வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து இந்தியாவிற்குப் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு வருவதற்குப் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் கொண்டு வரும் பயணிகள், விமான நிலையத்தில் சுங்கத்துறை வழங்கும் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது.

அது 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இனி வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு வரும் பட்சத்தில் அதைச் சுங்கத் துறை வழங்கும் தனி படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இது தவிர மேலும் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எல்சிடி, எல்ஈடி, பிளாஸ்மா போன்ற தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொண்டு வந்தால், அந்த விவரங்களும் புதிய படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வரி விதிப்புக்கு உட்பட்ட பொருட்கள், தங்க நகைகள், 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் மேல் கொண்டு வந்தால் சுங்கத் துறை படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்கிற விதியிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.