Home கலை உலகம் பேய்ப்பட ‘நாயகி’ ஆகிறார் திரிஷா!

பேய்ப்பட ‘நாயகி’ ஆகிறார் திரிஷா!

565
0
SHARE
Ad

Nayagi-Movie-Pooja-Stills-15சென்னை. ஆகஸ்ட் 20- நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவும் பேய்ப் படத்தில் நடிக்கக் களம் இறங்கிவிட்டார்.

‘மாயா’ என்ற பேய்ப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பது நாமறிந்ததே! அதுபோல் திரிஷாவும் தற்போது ‘நாயகி’ என்ற பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னணி நடிகர்கள் கூட பேயாக நடிக்கத் தொடங்கிவிட்ட காலகட்டம் இது. நடிகர் சூரியா மாஸ் படத்தில் பேயாக நடித்தார். தற்போது சத்யராஜ் கூட ‘ஜாக்சன் துரை’என்னும் படத்தில் பேயாக நடித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் முன்னணி நடிகர்களைத் தொடர்ந்து முன்னணி நடிகைகளும் பேயாக நடிக்கத் தொடங்கிவிட்டனர்.

த்ரிஷா பேயாக நடிக்கும் ‘நாயகி’  என்னும் படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் கலந்து கொண்ட திரிஷா இப்படத்தில் நடிப்பது குறித்துக் கூறியதாவது:

“நான் இப்போது நடிக்கும் ‘அரண்மனை-2’ ம் பேய்ப் படம் தான்.ஆனால், அதில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நான் நடிக்கிறேன்.

இருந்தாலும், என்னை மையப்படுத்தி உருவாகும் ஒரு பேய்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக எனக்கிருந்தது. அது இந்தப் படம் மூலம் நிறைவேறி விட்டது.

இது பேய்ப் படமா? அல்லது பழி வாங்கும் கதையா? என்று கேட்கிறார்கள்.அ தை இப்போது சொல்ல முடியாது.

இப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானனது. 1980-களில் நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது” என்றார்.

அழகான பேயைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க்கிறார்கள் திரிஷா! விரைவில் வாருங்கள்!