Home Featured நாடு பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ மணிமாலாவின் கணவர் டத்தோஸ்ரீ என்.டி.இராஜா காலமானார்!

பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ மணிமாலாவின் கணவர் டத்தோஸ்ரீ என்.டி.இராஜா காலமானார்!

635
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – மலேசிய இந்திய சமுதாயத்தில் அதிகமான டத்தோ மற்றும் டத்தோஸ்ரீ பட்டங்களைப் பெற்றிருந்தவர் எனப் புகழ் கொண்ட பிரபல வணிகரான டத்தோஸ்ரீ என்.டி.இராஜா இன்று காலமானார்.

கெந்திங் நிறுவனத்தின் முன்னாள் பொது உறவு நிர்வாகியான என்.டி.ராஜா கெந்திங் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் மாநில சுல்தான்களின் மத்தியில் பிரபலமானவராகவும், அனைத்து அரச குடும்பங்களினாலும் பெரிதும் விரும்பப்பட்டவராக இருந்தார் என்பதோடு, அவர்களோடு நல்லுறவையும் பேணி வந்தவர்.

அதன் காரணமாக, ஒவ்வொரு மாநில சுல்தான்களும் அவருக்கு டத்தோ மற்றும் டத்தோஸ்ரீ போன்ற பட்டங்களை வழங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

பல்வேறு இந்திய சமூக இயக்கங்களுக்கு உதவிகளும், நன்கொடைகளும் வழங்கியவர் என்.டி.இராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து நிரந்தர நிலப்பட்டா பெற்றுத் தருவதில் பின்னணியில் இருந்து அமைதியாக பணியாற்றியவர் என்.டி.இராஜா என்றும் கூறுவார்கள்.

அண்மையக் காலமாக அவர் உடல் நலக் குறைவோடு இருந்தார் என அவருக்கு நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

என்.டி.இராஜா, மலேசியாவின் பிரபல பாடகி டத்தின்ஸ்ரீ மணிமாலாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் டத்தின்ஸ்ரீ மணிமாலாவுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.