Home Featured உலகம் பாங்காக் குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதலில்லை: தாய்லாந்துப் பிரதமர்!

பாங்காக் குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதலில்லை: தாய்லாந்துப் பிரதமர்!

563
0
SHARE
Ad

prayuth-x-0910-netபாங்காக், ஆகஸ்ட் 20- தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இந்துக் கோவிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிற்குத் தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார்.

பாங்காக்கில் இந்துக் கோவிலிலும் வணிக வளாகமும் இருந்த இடத்தில் கடந்த 17-ஆம் தேதி இரவு நடந்த பயங்கரக் குண்டுவெடிப்பில் 27 பேர்உயிரிழந்தனர். 78 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி இறந்தோரில் பெரும்பாலோர்  வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

#TamilSchoolmychoice

இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட செயலாகும் என எண்ணப்பட்டது. குண்டு வைத்ததாகச் சந்தேகப்படக் கூடிய இளைஞன் ஒருவனது புகைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், கண்காணிப்பு ஒளிப்படக்கருவியில் பதிவான குற்றாவாளியின் உருவத்தை ஆய்வு செய்ததில் அவர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இல்லையென்றும், வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதன் பின்னணியில்  10 பேர் கொண்ட  சதிக்கும்பல் இருப்பதாகவும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க இன்டர்போலின் உதவியை நாடி இருப்பதாகவும்  காவல்துறைத் தலைமை அதிகாரி சோம்யாத் பூம்பான்முயாங் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி குறித்த தகவல் தருபவர்களுக்குச் சுமார் 17 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.