Home Featured வணிகம் 35 வயதிற்குட்பட்ட உலகப் பணக்காரர்களில் மார்க் சக்கர்பெர்க்கிற்கு முதலிடம்!

35 வயதிற்குட்பட்ட உலகப் பணக்காரர்களில் மார்க் சக்கர்பெர்க்கிற்கு முதலிடம்!

574
0
SHARE
Ad

mark-zuckerberg1கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – ‘வெல்த் எக்ஸ்’ (Wealth-X) நிறுவனம், 35 வயதிற்குட்பட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தான் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தனித்த சொத்து மதிப்பு மட்டும் 41.6 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பட்டியலின் அடுத்தடுத்த இடங்களிலும் பேஸ்புக்கின் இணை நிறுவனர்களே வரிசைகட்டி நிற்கின்றனர். பட்டியலின் இரண்டாவது மற்றும் நான்காவது இடங்களை பேஸ்புக் இணை நிறுவனர்கள் டஸ்டின் மோஸ்கொவிட்ச் மற்றும் எடுவார்டோ சவேரின் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரின் சொத்துமதிப்பு முறையே 9.3 பில்லியன் டாலர்கள் மற்றும் 5.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

34 வயதான சீனப் பெண் ஹுய்வான் யாங்கிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இவர் சீனாவின் ‘ரியல் எஸ்டேட் டெவலப்பர் கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ்’ (Chinese real estate developer Country Garden Holdings) நிறுவனத்தின் துணைத் தலைவராவார். இவரின் சொத்துமதிப்பு 5.9 பில்லியன் டாலர்கள் ஆகும்.

#TamilSchoolmychoice

20 உலகப் பணக்காரர்கள் கொண்ட இந்த பட்டியலில், 11 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், மூன்று சீனர்ளும் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், இந்தியர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.