Home கலை உலகம் விஜய்யின் ‘புலி’முன்னோட்டக் காட்சி யூடியூப்,டுவிட்டரில் சாதனை!

விஜய்யின் ‘புலி’முன்னோட்டக் காட்சி யூடியூப்,டுவிட்டரில் சாதனை!

607
0
SHARE
Ad

puli6சென்னை, ஆகஸ்ட் 20- விஜய்யின் புலி பட முன்னோட்டக் காட்சி (trailer) நேற்று நள்ளிரவு வெளியானதிலிருந்து, டுவிட்டரில் #MajesticPuliTrailer (கம்பீரமான புலி ட்ரெய்லர்) என்ற வார்த்தை பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

பலரும் டுவிட்டரில் புலி ட்ரெய்லரைப் பற்றிப் பேசி வருகிவதால்  #MajesticPuliTrailer என்ற வார்த்தை ஒரு trend –ஆகிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், யூடியூப் இணையதளத்தில் முன்னணிப் படங்களின் டிரெய்லர் வெளியிட்டால், அதிகமான like கொடுத்து அதை வெற்றிகரமானதான ஆக்குவதென்பது இப்போது வழக்கமாகி விட்டது.

#TamilSchoolmychoice

இந்தப் பாணியை முதலில் தொடங்கி வைத்தது ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் தான். அதன் பிறகு  கத்தி, என்னை அறிந்தால், ஐ  படங்களின் முன்னோட்டக் காட்சிகள் பல்லாயிரக்கணக்கான like-ஐப் பெற்றுச் சாதனை படைத்தன.

விக்ரமின் ஐ பட டிரெய்லர் 24 மணி நேரத்தில் 41,000 பேர் like செய்ததும், அஜித் நடித்த என்னை அறிந்தால் டிரெய்லர் 40,000 பேர் like செய்ததும் தான் சாதனையாக இருந்து வந்தது.

ஆனால், அந்தச் சாதனையை 10 மணி நேரத்திற்குள் 40,000க்கும் மேற்பட்ட likes-ஐ அள்ளி புலி பட டிரெய்லர் முறியடித்திருக்கிறது.