Home அரசியல் கூட்டரசு பிரதேசம் மற்றும் கிள்ளான் பகுதியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு 80,000 வீடுகள்- நஜிப்

கூட்டரசு பிரதேசம் மற்றும் கிள்ளான் பகுதியில் நடுத்தர வர்க்கத்தினருக்கு 80,000 வீடுகள்- நஜிப்

654
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், மார்ச்.11- கூட்டரசு பிரதேசம் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்கத்தினருக்கு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான 80,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

‘பிரிமா’ எனும் ஒரே மலேசியா வீட்டுடமைத்திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். எஞ்சிய வீடுகள் கூட்டரசுப் பிரதேசம், நகர்புற நல்வாழ்வுதுறை அமைச்சினால் அமல்படுத்தப்படும்.

மாதம் ஒன்றுக்கு 2,500 லிருந்து 7,000 வெள்ளி வரை வருமானம் பெறும் பிரிவினர் வாங்ககூடிய ஒரு எல்லையிலேயே இதன் விலைகள் அமைந்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், நடுத்தர வருமானம் பெறும் பிரிவினர் அரசாங்கத்திட்டங்களில்  பெரும்பாலும் விடுப்பட்டு விடுகின்றனர் என்பதால், இது அவர்களுக்கு மிக முக்கியமாகும் என்று உத்தரவாதம் அளித்தார்.

#TamilSchoolmychoice

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக ‘பிரிமா’ போன்ற திட்டங்களை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

அதில் 50,000 வீடுகள் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியிலும், 30,000 வீடுகள் கூட்டரசுப் பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை அமைச்சின் கீழ் கூட்டரசுப் பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்படும்.

இவையனைத்தும் மக்கள் வாங்கக்கூடிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று ஆலாம் டாமய் செராஸில் ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.