Home உலகம் சீனாவில் மீண்டும் வெடி விபத்து!

சீனாவில் மீண்டும் வெடி விபத்து!

470
0
SHARE
Ad

chinaசிபோ – சீனாவின் சாங்டங் மாகாணத்தில் உள்ள சிபோ நகரத்தில், இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிபோ நகரத்தில் இயங்கி வந்த இரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி தான், தியான்ஜின் நகரில் உள்ள இரசாயனக் கிடங்கில் மிகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை 121 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.