Home தொழில் நுட்பம் இணையதளச் சீண்டலைத் தடுக்கும் ‘ரீ திங்’ மென்பொருள்:இந்திய வம்சாவளி மாணவி சாதனை!

இணையதளச் சீண்டலைத் தடுக்கும் ‘ரீ திங்’ மென்பொருள்:இந்திய வம்சாவளி மாணவி சாதனை!

633
0
SHARE
Ad

27-1440677574-trisha-prabhu-s-600நியூயார்க் – இணையதளத் தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் வகையிலும், இணையதளத் தவறுகளைத் தடுக்கும் விதத்திலும் ‘ரீதிங்க்’ என்னும் மென்பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிஷா என்ற மாணவி.

தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்க்கைக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ள போதிலும்,அதனால் பல தீமைகளும் சமூகச் சீரழிவுகளும் ஏற்படுகின்றன.

தனி மனிதனைப் பற்றிய உண்மையான செய்திகளை விட, சித்தரிக்கப்பட்ட தவறான செய்திகளே பெரும்பாலும் பரவுகின்றன. இதனால் இணையதளம் சமீபகாலமாக ஓர் அச்சுறுத்தும் சக்தியாக மாறி வருகிறது.

#TamilSchoolmychoice

ஆகவே, இணையதளக் கேடுகளைத் தடுக்கும் வகையில்‘ரீதிங்க்’ எனப் பெயரிடப்பட்ட ஒரு மென்பொருளை, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதேயான திரிஷா பிரபு என்கிற மாணவி உருவாக்கி அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

இந்த மென்பொருளை உருவாக்குவதற்கு அடிப்படைக் காரணம்,திரிஷாவின் அத்தை சாலை விபத்தில் உயிரிழந்ததும், இணையதளத்தில் கேலி-கிண்டலுக்கு (bully) ஆளான ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதும் தான்.

மூளையின் சின்ன திசைத் திருப்பல்தான் விபத்து நிகழவும், தற்கொலை செய்து கொள்ளவும் காரணமாவதாக உணர்ந்த திரிஷா, இந்த ஆய்வை மேற்கொண்டார்.

ஒருமுறை பதிவு செய்த அவச்சொல்லைத் திரும்பப் பெறவோ, அழிக்கவோ முடியாதுதான்.ஆனால்,அதை முன்கூட்டியே தவிர்க்க  வாய்ப்பிருக்கிறது.

அப்படிப்பட்ட வாய்ப்பைத் திரிஷாவின் இந்த மென்பொருள் ஏற்படுத்தித்தரும். இதன்மூலம் இணையதளத்தில் தவறுகள் நேராமல் தடுக்க முடியும் என்கிறார் திரிஷா.