Home Featured நாடு மலையாள வம்சாவளியினருக்கு டாக்டர் சுப்ராவின் திருவோணம் வாழ்த்து

மலையாள வம்சாவளியினருக்கு டாக்டர் சுப்ராவின் திருவோணம் வாழ்த்து

1068
0
SHARE
Ad

Onam-festival-கோலாலம்பூர் – இன்று திருவோணம் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மலையாள வம்சாவளியினர் அனைவருக்கும், மலேசிய சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசிய மண்ணில் வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டினைக் கடைப்பிடித்து, திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள வம்சாவளியினர் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

Subramaniam-MICஇப்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மலேசிய மலையாள சகோதர சகோதரிகளுக்கும், அவர்களின் மனங்களில் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும், அவர்களின் குடும்பங்களில் அமைதியும், ஆரோக்கியமும் தழைக்கட்டும் என்று வாழ்த்துவதாகவும் டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த திருவோணம் பண்டிகை மக்களின் வாழ்வில் புது வசந்தத்தைக் கொண்டுவருவதாக விளங்க வேண்டும் என்றும், வளத்தையும், சுகாதார நலத்தையும் வெற்றியையும் தர வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.