Home கலை உலகம் கேரளாவில் முதன்முறையாக ஓணம் பண்டிகைக்கு விஜய்யின் சிறப்பு நிகழ்ச்சி!

கேரளாவில் முதன்முறையாக ஓணம் பண்டிகைக்கு விஜய்யின் சிறப்பு நிகழ்ச்சி!

619
0
SHARE
Ad

27-1440674145-vijay35465திருவனந்தபுரம் – தமிழ்நாட்டிற்குத் தீபாவளி போல் கேரளாவுக்கு ஓணம் சிறப்பு.

இந்த ஓணம் பண்டிகைக்குக் கேரளாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப் புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தயாராகி வருகின்றன.

பொதுவாக ஓணம் பண்டிகையின் போது மலையாள முன்னணி நடிகர்களின் படம் அல்லது இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளைத் தான் ஒளிபரப்புவது கேரளத் தொலைக்காட்சி நிறுவனங்களின் வழக்கம்.

#TamilSchoolmychoice

ஆனால், இம்முறை அதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கேரளாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான சூர்யா, நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பவிருக்கின்றது.

ஓணம் கொண்டாட்ட நிகழ்வுகளில் முதன்முதலாக மலையாளம் அல்லாத ஒரு படத்தின் இசை வெளியீடு ஒளிபரப்பாக இருப்பது சாதனை தான்.

மேலும், விஜயின் படங்களை மலையாளத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போது, ஒவ்வொரு முறையும் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகப் புள்ளி விவரக் கணக்கு தெரிவிக்கிறது.

இதிலிருந்து கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியுள்ளதும், விஜய்யின் பிரபல்யம் பரந்து விரிந்து செல்வதும் புலனாகிறது.