Home Featured நாடு நஜிப்புக்கு எதிராக வழக்கு: “நான் தனியாள் இல்லை” என்கிறார் அம்னோ உறுப்பினர்

நஜிப்புக்கு எதிராக வழக்கு: “நான் தனியாள் இல்லை” என்கிறார் அம்னோ உறுப்பினர்

897
0
SHARE
Ad

Aninaகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் நிதி நன்கொடையாக வந்தது தொடர்பில், அவர் மீது லங்காவி அம்னோ பிரிவு பெண் உறுப்பினர் அனினா சவுடின் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளார்.

மலேசிய மக்கள் சார்பிலும், 3 மில்லியன் அம்னோ உறுப்பினர்கள் சார்பில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கண்டிப்பாக நான் தனியாளாக இல்லை” என்று இன்று டூத்தா நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்த நடவடிக்கையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் போன்று நஜிப்பை தொடர்ந்து விமர்சித்து வருபவர்கள் இணைந்து உள்ளார்களா? என்பதைக் கூற அனினா மறுத்துவிட்டார்.