Home இந்தியா பெண்களின் பின்புறம் மருந்து ஊசியால் குத்திவிட்டு மாயமாகும் சைக்கோ!

பெண்களின் பின்புறம் மருந்து ஊசியால் குத்திவிட்டு மாயமாகும் சைக்கோ!

714
0
SHARE
Ad

mans-silhouette-holding-a-big-syringe-sami-sarkisகோதாவரி – ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பச்சைநிற முகமூடி அணிந்த மர்ம மனிதன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவதாகவும், அவன் தனியாக நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தில் மருந்து நிரப்பப்பட்ட ஊசியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாகக் காவல்துறையினருக்குப் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இதனால் பெண்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.அது விஷா  ஊசியாகவோ எய்ட்ஸ் ஊசியாகவோ இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இவ்வாறு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்ட பெண்கள் பீமாவரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு  ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மர்ம ஆசாமி சைக்கோவாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

அவனைப் பிடிக்க 160 சிறப்புக் காவல் படை அமைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்க அடையாளங்களைக் கொண்டு அந்த சைக்கோ வாலிபரின் உருவ மாதிரியைக் கணினியில் வரைந்து வருகிறார்கள்.

விரைவில்  அந்தப் படம்  வெளியிடப்படும் என்றும், அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.