Home இந்தியா திமுகவுடனும் கூட்டணி இல்லை – கருணாநிதிக்கு அதிர்ச்சி அளித்த தேமுதிக!

திமுகவுடனும் கூட்டணி இல்லை – கருணாநிதிக்கு அதிர்ச்சி அளித்த தேமுதிக!

600
0
SHARE
Ad

vijayakanth

திருச்சி – தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துவிட்டால், எப்படியும் தேமுதிக-வையும் இழுத்துவிடலாம் என காய் நகர்த்தி வந்த திமுக-விற்கு, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கூறி, பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தாத்தையங்கார்பேட்டையில், சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

#TamilSchoolmychoice

karunanidhiஇந்த விழாவில் பேசிய  பிரேமலதா விஜயகாந்த், அதிமுக ஆட்சியைப் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் கடுமையாக விமர்சித்தார். ஒருவேளை தேமுதிக, திமுக பக்கம் கூட்டணிக்காக சாய்ந்துவிடுமோ என்றும் நினைக்கும் வேளையில், “ஜெயலலிதாவை நான் கடுமையாக விமர்சிப்பதனால், தேமுதிக,  திமுக கூட்டணிக்கு போறாங்கன்னு கிளப்பிவிடுவாங்க. நிச்சயமா இல்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்று தேமுதிகதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், திமுக-வின் கூட்டணிக் கனவு கலைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.