Home Featured நாடு வெளிநாடுகளில் பெர்சே பேரணியில் பங்கேற்ற மலேசியர்கள் மீது நடவடிக்கை – வெளியுறவு அமைச்சு

வெளிநாடுகளில் பெர்சே பேரணியில் பங்கேற்ற மலேசியர்கள் மீது நடவடிக்கை – வெளியுறவு அமைச்சு

548
0
SHARE
Ad

bersih7கோலாலம்பூர்- வெளிநாடுகளில் நடைபெற்ற பெர்சே பேரணியில் பங்கேற்ற மலேசியர்கள் அடையாளம் காணப்படுவர் என்றும் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவு துணை அமைச்சர் ரீசால் மெரிக்கன் கூறியுள்ளார்.

அடையாளம் காணப்படும் மலேசியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அவர்களைப் பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“சட்டப்பூர்வ நடவடிக்கையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது. ஏனெனில் அவர்களின் செயல்பாடு காரணமாக அனைத்துலக அரங்கில் மலேசியா மீதான நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடும்.”

#TamilSchoolmychoice

“இதன் காரணமாக மலேசியாவில் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லை என்று கருதிவிடக் கூடாது. ஏனெனில் மலேசியா ஒன்றும் சர்வாதிகார நாடல்ல.”

“மலேசிய பிரதமர் மீதான தங்களின் அதிருப்தியை வெளிநாடுகளில் இருந்தபடி வெளிப்படுத்துவது சரியல்ல. வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் தாய்நாட்டின் நற்பெயரையும் மரபுகளையும் கட்டிக்காக்க வேண்டும்.”

“பேச்சு சுதந்திரம் உள்ளது என்பதற்காக எதையும் எப்படி வேண்டுமானாலும் கூறலாம் என்று அர்த்தமல்ல. பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள் என்ற பெயரில் அனைத்தையும் சட்டப்பூர்வமாக்கப் போகிறோமா?” என்று ரீசால் மெரிக்கன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெர்சே பேரணியில் பங்கேற்றவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று குற்றம்சாட்டிய அவர், நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தங்கள் பேரணிக்கான தேதிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்ந்தெடுத்திருப்பது நியாயமல்ல என்றார்.

“ஏன் வேறொரு தேதியை அவர்கள் தேர்வு செய்யவில்லை? அவர்கள் பேரணிக்காக ஒன்றுகூட விரும்பினால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல அரங்குகள் உள்ளன. அவர்கள் அங்கே கூடியிருக்க வேண்டும்” என்றார் ரீசால் மெரிக்கன்.