இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மொகிதீன் யாசின் குறித்து பொய்யான தகவல்களை பொறுப்பற்ற தரப்பினர் உள்நோக்கத்துடன் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“பெர்சே பேரணியில் பங்கேற்க உள்ளதாக தமது முன்னாள் அரசியல் செயலாளர்கள் யார் மூலமாகவும் மொகிதீன் கூறவில்லை” என்று முகமட் நார்டின் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
1எம்டிபி விவகாரம் குறித்து மொகிதின் கேள்வி எழுப்பியதாக வெளியான தகவலையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதையடுத்து அவர் பெர்சே பேரணியில் பங்கேற்பார் எனக் கருதப்பட்டது.
Comments