கோலாலம்பூர் – கடந்த 34 மணி நேரங்களாக நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியின் நிறைவாக, 12 மணியளவில் டத்தாரான் மெர்டேக்காவில் கூடியிருந்த பங்கேற்பாளர்கள், ஒருமனதாக தேசிய கீதம் (நெகாராகூ) பாடி மகிழ்ச்சியுடன் பேரணியை நிறைவு செய்தனர்.
இன்று மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா 10 முறை ‘மெர்டேக்கா’ என்று முழக்கமிட்டார்.
அதன் பின்னர், பங்கேற்பாளர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து செல்லும்படி பெர்சே ஏற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டனர்.
அதேவேளையில், போகும் வழியில் அந்தப் பகுதியில் கிடக்கும் குப்பைகளையும் அப்புறப்படுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
படம்: Malaysiakini