கோலாலம்பூர் – சனிக்கிழமை ஆகஸ்ட் 30ஆம் தேதி பிற்பகல் 2.00 மணியளவில் தொடங்கிய பெர்சே போராட்டம், அன்றிரவு முழுவதும் தொடர்ந்தது. பங்கேற்பாளர்கள் இரவு முழுவதும், போராட்டக் களத்தின் மையமான டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றி, அங்கேயே படுத்துறங்கி, போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
சனிக்கிழமை இரவின் சுவாரசியமான படக் காட்சிகள் சில இங்கே செல்லியல் வாசகர்களின் பார்வைக்காக:-
ஜாலான் துன் பேராக்-ஜாலான் மலாயு சந்திப்பில் உள்ள ஓசிபிசி வங்கியில் தாழ்வாரத்தில் சனிக்கிழமை இரவன்று உறங்கி ஓய்வெடுக்கும் பெர்சே பங்கேற்பாளர்கள்….
டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றியுள்ள பகுதியில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பங்கேற்பாளர்கள் சிலர் – தூக்கம் வராமல் சக நண்பர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிலர்….
சமூகப் போராட்டம் என்று வந்துவிட்டால் சாலைகளும் சொகுசான படுக்கைகளாகும் என்பதைக் காட்டும் வண்ணம் சாலைகளில் படுத்துறங்கும் பெர்சே பங்கேற்பாளர்கள்…
தலைவனுக்கு அழகு தொண்டர்களோடு தானும் களத்தில் இறங்குவதுதான். அதற்கு உதாரணமாக, இரவில் வெளிப்புறங்களில் படுத்துறங்கப் பயன்படுத்தப்படும் படுதாவுடன், ஓய்வெடுக்கவும், உறங்கவும், தயாராகும் ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்…
சாலைகளில் படுத்துறங்கி இரவெல்லாம் போராட்டத்தைத் தொடரும் பங்கேற்பாளர்கள்..
பங்கேற்பாளர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து போராட்டம் தொடரும் என்பதால், அவர்கள் படுத்துறங்குவதற்கு சிறப்பு படுக்கை விரிப்புகள் விற்பனை செய்யப்பட்டன – விநியோகிக்கப்பட்டன. பெர்சே குறியீடுகளோடு, மஞ்சள் நிறத்திலான படுக்கை விரிப்பில், பொட்டல் வெளியில் – சாலையில் ஆழ்ந்து உறங்கும் பங்கேற்பாளர் ஒருவர்…
சனிக்கிழமை இரவு போராட்டத்தைத் தொடர்ந்த முஸ்லீம் பங்கேற்பாளர்கள் மறவாமல், தங்களின் தொழுகையை நடத்துகின்ற காட்சி…மலாய்க்காரர்கள் அதிகம் இந்த முறை பெர்சேயில் கலந்து கொள்ளவில்லை என்ற குறை கூறலும் எழுந்திருக்கின்றது. அதற்குக் காரணம் பாஸ் கட்சி இந்த முறை பெர்சே போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டதுதான் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
டத்தாரான் மெர்டேக்காவுக்கு முன்புறம் திரண்டிருக்கும் பங்கேற்பாளர்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டினர். கூட்டத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவரைப் பாருங்கள்…
யாருக்கு அச்சம்? என்ற கேள்விக் கணையோடு, “டி-சட்டைகளை வேண்டுமானால் நீங்கள் தடை செய்யலாம். ஆனால் ஒரு சிந்தனையை நீங்கள் தடை செய்யமுடியாது” என்ற வாசகத்தை ஏந்தி நிற்கும் பங்கேற்பாளர்கள் இருவர்….
தொகுப்பு: செல்லியல்