Home கலை உலகம் கபாலி முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது; மலேசியாவில் இல்லை!

கபாலி முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது; மலேசியாவில் இல்லை!

597
0
SHARE
Ad

tumblr_inline_ntsseihWZz1tt7oxg_500சென்னை – ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 17- ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் செப்டம்பர் 18- ஆம் தேதி மலேசியாவில் தொடங்க இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாயின..

ஆனால், தற்போது அதில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவுக்குப் பதில் செப்டம்பர் 17-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்குகின்றனர். ஓரிரு வாரங்கள் சென்னையிலேயே படப்பிடிப்பு நடக்கும்.

#TamilSchoolmychoice

அதன்பிறகு இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்கு மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஏனிந்தத் திடீர் மாற்றம் எனத் தெரியவில்லை.