Home உலகம் “ஒசாமா சாகவில்லை: கொன்றதாக அமெரிக்கா நாடகமாடுகிறது”- எட்வர்ட் ஸ்னோடன்!

“ஒசாமா சாகவில்லை: கொன்றதாக அமெரிக்கா நாடகமாடுகிறது”- எட்வர்ட் ஸ்னோடன்!

665
0
SHARE
Ad

edwardமாஸ்கோ – சர்வதேசப் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் சாகவில்லை; உயிரோடு தான் இருக்கிறார்.அவர் தற்போது அமெரிக்க உளவுத்துறையின் பாதுகாப்பில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் எனப் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் .

இவர்அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர். அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயந்து இரண்டாண்டு காலமாக ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இவர் அண்மையில் மாஸ்கோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த அதிரடித் தகவலைக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் கொல்லவில்லை. கொன்றது போல பொய்யான ஆவணங்களைக் காட்டி அனைவரையும் நம்ப வைத்துள்ளனர்.

சுட்டுக் கொன்றது போல் நாடகமாடி அவரைக் குடும்பத்துடன் பஹாமாஸில் யாருக்கும் தெரியாத ஓர் இடத்தில் கொண்டு போய் வைத்துள்ளனர். இந்த நாடகத்திற்குப் பாகிஸ்தானும் உடந்தை.

ஒசாமாவின்செலவுக்காக அமெரிக்கா மாதந்தோறும் 100,000க்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து வருகிறது. இந்தத் தொகை சில தொழிலதிபர்கள் மற்றும் அமைப்புகள் மூலம் நாஸாக் வங்கிக் கணக்கு வழியாக அனுப்பப்படுகிறது

தாடியும், ராணுவ அங்கியும் இல்லாமல் ஒசாமா சாதாரணமாக இருப்பதால் யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை.

அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

செப்டம்பர் மாதம் வெளியிட உள்ள புத்தகத்தில் அவற்றை வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.