Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணி சார்பில் தலைவராக நாசர் போட்டி!

நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணி சார்பில் தலைவராக நாசர் போட்டி!

587
0
SHARE
Ad

vishal_2480998fசென்னை – நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார் என்று விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள இக்ஸா மையத்தில் இலங்கை அகதிகள் குழந்தைகளுடன் விஷால் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

அகதிகள் குழந்தைகளின் கல்விக்கு மாதம் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் செலவாவதாக அம்மையத்தின் நிர்வாகி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உடனே, அக்குழந்தைகளின் கல்விக்குத் தேவைப்படும் அடுத்த ஒரு வருடத்துக்கான செலவை விஷால் ஏற்றுக் கொண்டதோடு, தொடர்ந்து அவரது ஆயுள்காலம் முழுவதும் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

“சுய விளம்பரத்திற்காகவோ அரசியல் பண்ண வேண்டும் என்றோ எந்த உதவிகளையும் நான் செய்வதில்லை.

வழி தெரியாதவர்களுக்கு வழி சொல்லிக் கொடுக்கும் போக்குவரத்துக் காவலர் போலத் தான் வாழ்க்கைக்கு வழி தெரியாமல் தவிக்கும் இவர்களுக்கு உதவுகிறேன்.

அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லாமல் இல்லை.இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என நினைக்கிறேன்.

வருகிற நடிகர் சங்கத் தேர்தலில்  கூட போட்டியிடவில்லை. எங்கள் அணி சார்பில் நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார் விஷால்.