Home உலகம் அமெரிக்கா: ஒசாமாவின் மகனுக்கு 1 மில்லியன் டாலர் விலை!

அமெரிக்கா: ஒசாமாவின் மகனுக்கு 1 மில்லியன் டாலர் விலை!

850
0
SHARE
Ad

அமெரிக்கா: ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின்லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சன்மானமாக வழங்க அமெரிக்க வெளியுறவுத் துறை முடிவு செய்து, இது குறித்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

ஒசாமாவிற்குப் பிறகு, அல்கய்டா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவராக தற்போது ஹம்சா உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஒசாமாவைக் கொன்றதற்காக அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டும் என சமீபக் காலங்களில் ஹம்சா காணொளிகள் மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஹம்சா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் நாட்டுக்குள் செல்லவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்தது.