கோத்தா பாரு: பாஸ் கட்சி, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை காசோலையாக செலுத்தியதை, பாஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் நஸ்ருடின் ஹசான் மறுத்தார். அந்த காசோலையில் இடம் பெற்றிருக்கும் வங்கி கணக்கு எண் உண்மையானதல்ல என அவர் குறிப்பிட்டார்.
கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஒரு ரிங்கிட் மற்றும் ஐந்து ரிங்கிட்டை அந்த வங்கிக் கணக்குக்கு செலுத்த முற்பட்ட போது, அந்த வங்கி கணக்கு எண் உண்மையானதாக இல்லை என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிடமிருந்து, 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியூகாசல் பிரவுன் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.