கோலாலம்பூர்: தற்போதைய சூடான வானிலைக் காரணமாக பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் அனைத்து விதமான வெளி நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார்.
அடுத்த வாரம் தொடங்கி பெரும்பாலான பள்ளிகளில், வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி உள்ளதால், தற்போதைக்கு அவற்றை தள்ளிவைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசிய வானிலைத் துறை (MetMalaysia), மேற்கு தீபகற்பம் மற்றும் சபாவில் சூடான வானிலை மார்ச் மாதம் இறுதி வரையிலும் நீடிக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும், பள்ளி மாணவர்களை சம்பந்தப்படுத்திய வெப்பத்தாக்குச் (heat stroke) சம்பவங்கள் எதுவும் பெறவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.