Home கலை உலகம் 80-களின் நடிகர்- நடிகையர் சந்திப்பு: ரஜினி பங்கேற்கவில்லை!

80-களின் நடிகர்- நடிகையர் சந்திப்பு: ரஜினி பங்கேற்கவில்லை!

553
0
SHARE
Ad

80actors_2529309fசென்னை- 1980-ஆம் ஆண்டுகளில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்த மூத்த நடிகர்- நடிகையரின் சந்திப்பு தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக  இந்த ஆண்டும் சென்னை ஒலீவ் கடற்கரையில் உள்ள நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுஸில் ஆகஸ்ட் 29ம் தேதி இரவு நடைபெற்றது.

கடந்த 5 ஆண்டுகள் தவறாமல் பங்கேற்ற ரஜினிகாந்த், இந்த ஆண்டு இச்சந்திப்பில்  பங்கேற்கவில்லை.

இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு முன்னணி நடிகர், நடிகைகள் ஏற்றுக் கொள்வார்கள். இந்தாண்டு சுஹாசினி, லிஸி மற்றும் குஷ்பு மூவரும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்தாண்டு சிறப்பு அழைப்பாளராக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், இவ்வாண்டில் முதல் முறையாகச் சத்யராஜ், பாக்யராஜ், ரகுமான், ஜெயசுதா, பார்வதி ஸ்வப்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சென்ற ஆண்டு எல்லோரும் கடற்கரை வடிவமைப்பிலான உடைகள் அணிந்து கொண்டாடினர்.

இந்தாண்டு முழுக்க முழுக்கச் சிவப்பு. சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்து கொண்டாடியதோடு, சந்தித்த இடத்தையும்  சிவப்பு நிறத்தால் அலங்கரித்திருந்தார்கள். பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!

.